Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 686)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

அவதீரித தேவதாந்தராணாம் அநகை: த்வம் மணிபாதுகே மயூகை: ஹரிநீல ஸமுத்பவை: விதத்ஸே ஹரிஸாரூப்யம் அயத்நத: ஜநாநாம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனைத் தவிர மற்ற தேவதைகளை அண்டாமல் உள்ள மக்களுக்கு, உனது இந்த்ரநீலக் கற்கள் செய்வது என்ன வென்றால் - ஸ்ரீரங்கநாதனின் கறுத்த நிறத்தை ஒத்த நிறமாக அவர்களை உனது இந்த்ரநீலக் கற்களின் ஒளி மாற்றுகிறது.