Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 685)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

சரணாவநி பாதி ஸஹ்யகந்யா ஹரிநீல த்யுதிபி: தவ அநுவித்தா வஸுதேவ ஸுதஸ்ய ரங்கவ்ருத்தே: யமுநேவ ஸ்வயம் ஆகதா ஸமீபம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்கள் ஒளியுடன் தொடர்பு கொண்ட காவேரி நதியானது, வஸுதேவரின் பிள்ளையான கண்ணனின் அருகாமையைத் தேடி வந்த யமுனை போன்று, கறுத்து காணப்படுகிறது.