Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 684)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
அநகை: ஹரிநீல பத்த்தீநாம் ப்ரதமாநை: மணிபாதுகே மயூகை: அதரீகுருக்ஷே ரதாங்கபாணே: அமிதாம் ஊர்த்த்வம் அவஸ்திதஸ்ய காந்திம்
இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியானது அழகாக எங்கும் பரவியபடி உள்ளது. இந்த ஒளி மூலம் உன் மீது எழுந்தருளியுள்ள, சக்கரம் ஏந்திய ஸ்ரீரங்கநாதனின் அளவற்ற ஒளியை, சற்றே தாழ்ந்து காணும்படிச் செய்கிறாய்.