Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 683)
Paththati 20 - இந்த்ரநீல பத்ததி
அளகைரிவ பிம்பிதை: ச்ருதீநாம் ஹரிநீலை: ஸ்ருஜஸி த்வம் உந்மயூகை: கமலாதயிதஸ்ய பாதரக்ஷே கருணா உதந்வதி சைவல ப்ரரோஹாந்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய இந்த்ரநீலக் கற்களின் ஒளியைக் காணும்போது, வேதப் பெண்களின் அழகான தலைமுடிகள் உன் மீது படர்ந்துள்ளது போன்று தோற்றம் அளிக்கிறது. இவை மூலம், ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் கருணை என்னும் ஸமுத்திரத்தில் உள்ள பாசிமுளைகளை நீ உண்டாக்குகிறாய் போலும்.