Sri Paduka Sahasram - Paththati 20 - இந்த்ரநீல பத்ததி (ச்லோகம் 682)

Paththati 20 - இந்த்ரநீல பத்ததி

ஹரிரத்ந மரீசய: தவ ஏதே நவ நீலீரஸ நிர்விசேஷ வர்ணா ச்ருதி மூர்த்தநி சௌரி பாதரக்ஷே பலித அநுத்பவ பேஷஜம் பவந்தி

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உனது இந்திர நீலக்கற்களின் ஒளியானது, அவிரிச்சாயம் போன்று, அந்தச் சாயத்திற்கும் ஒளிக்கும் வேறுபாடு இல்லாமல் உள்ளது. இந்த ஒளி என்னும் சாயம் மூலமாக, ச்ருதிகளின் தலைகள் நரைத்துப் போகாமல், மருந்து பூசப்பெற்றதாக ஆகின்றன.