Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 680)
Paththati 19 - மரகத பத்ததி
ஸ்தல கமலநீவ காசித் சரணாவநி பாஸி கமல வாஸிந்யா: யத் மரதக தள மந்யே ய: கச்சிதஸௌ ஸமீக்ஷ்யதே சௌரி:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாமரையில் வீற்றுள்ள ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஏற்ற ஒரு நிலத் தாமரை வனமாக நீ உள்ளாய். அந்தத் தாமரை வனத்தின் இலைகளாக உனது மரதகக் கற்களின் பச்சை ஒளி உள்ளது. அந்த இலைகளின் நடுவே ஸ்ரீரங்கநாதன் ஒரு இலை போன்று காணப்படுகிறான்.