Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 679)

Paththati 19 - மரகத பத்ததி

பத்மாபூம்யோ: ப்ரணய ஸரணி: யத்ர பர்யாய ஹீநா யத் ஸம்ஸர்காத் அநக சரிதா: பாதுகே காமசாரா: தார ஸக்தம் தமிஹ தருணம் ப்ரீணயந்தே ஜரத்ய: நித்ய ச்யாமா: தவ மரதகை: நூநம் ஆம்நாய வாச:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரும், பூமிப்பிராட்டியும் ஸ்ரீரங்கநாதனிடம் எல்லை கடந்த ப்ரீதியுடன் எப்போதும் உள்ளனர். இவர்கள் போன்று இல்லாமல், தங்கள் விருப்பப்படி போபிகைகள் இவனுடன் இருந்தால் கூட, சிறிதும் தோஷம் அற்றவர்களாக இருந்தனர். ப்ரணவத்தில் எப்போதும் நிலைக்கின்ற இளமையான ஸ்ரீரங்கநாதனை, நீண்ட காலமாக வேதங்கள் என்னும் கிழவிகள் போற்றியபடி உள்ளனர். அவர்கள் மீது உனது மரகதக்கற்களின் ஒளியானது வீசியபடி நின்று, அவர்களைச் சிறுபெண்களாக மாற்றி, சந்தோஷம் அடையச் செய்கின்றன என்பது உறுதி.