Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 678)
Paththati 19 - மரகத பத்ததி
விபுல தம மஹோபி: வீத தோஷ அநுஷங்கம் விலஸத் உபரி நைல்யம் தேவி விஷ்ணோ: பதம் தத் ப்ருது மரதக த்ருச்யாம் ப்ராப்ய பாதாவநி த்வாம் ப்ரகடயதி ஸமந்தாத் ஸம்ப்ரயோகம் ஹரித்பி:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் அவனை அடைந்தவர்களுடைய பாவங்கள் அனைத்தையும் நீக்கியபடி உள்ளன. இவை இரவு நேர ஆகாயம் போன்று கறுத்த நிறம் (கருநீலம்) கொண்டதாக உள்ளன. அந்தத் திருவடிகள் உன்னை அடைந்த காரணத்தால், உனது அழகான பெரிய மரகதக்கற்களின் ஒளியை அனைத்துப் பக்கங்களிலும் பெறுகின்றன. இதனால் தங்கள் கறுமை நீங்கப்பெற்று, பகல் பொழுதின் ஆகாயம் போன்று எங்கும் ப்ரகாசித்தபடி உள்ளன.