Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 677)

Paththati 19 - மரகத பத்ததி

அநிமிஷ யுவதீநாம் ஆர்த்த நாதோபசாந்த்யை: த்வயி விநிஹித பாதே லீலயா ரங்கநாதே தததி சரண ரக்ஷே தைத்ய ஸௌதாநி நூநம் மரதக ருசிபி: தே மங்க்ஷு தூர்வாங்குராணி

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தேவலோகப் பெண்களுடைய அழுகைக் குரலைக் கேட்ட ஸ்ரீரங்கநாதன் அவற்றை நீக்க எண்ணி, உல்லாஸமாக உன் மீது தனது திருவடிகளை வைக்கிறான். உடனேயே அசுரர்களின் மாட மாளிகைகளில் உனது மரதகக்கற்களின் ஒளியானது பரவி, எங்கும் புல் முளைத்த நிலை உண்டாவது நிச்சயம் என்று உணர்த்துகிறது.