Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 676)

Paththati 19 - மரகத பத்ததி

நக கிரண நிகாயை: நித்யம் ஆவி: ம்ருணாளே மஹித ரஸவிசேஷே மேசகை: அம்சுபி: தே பரிகலயஸி ரம்யாம் பாதுகே ரங்கபர்த்து: பதகமல லமீபே பத்மநீ பத்ர பங்க்திம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளின் நகங்கள் தாமரைத் தண்டு போன்று உள்ளன. ஸ்ரீரங்கநாதனை அனுபவிப்பவர்கள், அந்தத் தண்டுகள் உள்ள நீர் போன்று உள்ளனர். ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள், தாமரை மலர்கள் போன்று உள்ளன. அந்தத் தாமரைக் கொடிகளின் இலைகளாக உனது மரதகக் கற்களின் ஒளியானது உள்ளது.