Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 675)
Paththati 19 - மரகத பத்ததி
ப்ரசுர நிகமசாகாம் பாதுகே ரங்கிண: த்வாம் சரணநக மயூகை: சாரு புஷ்ப அநுபந்தாம் மரதக தள ரம்யாம் மந்மஹே ஸஞ்சரந்தீம் கநகஸரித அநூபே காஞ்சித் உத்யாநலக்ஷ்மீம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நீ பல வேதங்களையும் கிளைகளாகக் கொண்டுள்ளாய். ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்கள் என்னும் ஒளியால் அந்தக் கிளைகளில் மலர்கள் குவிந்துள்ளன (அதாவது, திருவடி நகங்களின் ஒளியானது மலர்கள் போன்று உள்ளன என்று கருத்து). உனது மரதகக் கற்களின் ஒளியானது, அந்தக் கிளைகளில் உள்ள இலைகள் போன்று உள்ளன. இப்படியாகக் காவேரியினுடைய கரையின் அருகில் ஸஞ்சாரம் செய்யும் நீ, உத்யான லக்ஷ்மி போன்று உள்ளாய் என்றே எண்ணுகிறோம்.