Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 674)

Paththati 19 - மரகத பத்ததி

அதிகத பஹுசாகை: அச்மகர்ப்ப ப்ரஸூதை: மதுரிபு பதரக்ஷே மேசகை: அம்சுஜாலை: அநிதர சரணாநாம் நூநம் ஆரண்யகாநாம் கிமபி ஜநயஸி த்வம் கீசகாரண்ய துர்க்கம்

மது என்ற அசுரனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! பல கிளைகளை கொண்டவையாகவும், பச்சை நிறம் கொண்டவையாகவும் உனது மரதகக்கற்களில் இருந்து வெளிவரும் ஒளியானது உள்ளது. இந்த ஒளி மூலமாக, வேறு கதியில்லாமல் நிற்கும் உபநிஷத்துக்கள் என்னும் வனவாசிகள் வசிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பான மூங்கில் காடு ஒன்றை நீ அமைக்கிறாய் போலும்.