Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 673)
Paththati 19 - மரகத பத்ததி
ஹரிதமணி மயூகை: அஞ்சித அத்யாத்ம கந்தை: திசஸி சரணரக்ஷே ஜாத கௌதூஹலா த்வம் தநுஜமதந லீலா தாரிகாணாம் உதாராம் தமநகதல பங்க்திம் தேவி மௌளௌ ச்ருதீநாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தொடர்பு உள்ளதால் எப்போதும் மகிழ்வாக உள்ள உனது மரதகக்கற்களின் ஒளியானது, உபநிஷத்துக்களின் நறுமணத்தை எப்போதும் தங்களிடம் கொண்டுள்ளன. ஸ்ரீரங்நாதனுக்கு விளையாட்டுப் பாவைகள் போன்றுள்ள வேதங்களின் தலையில், அந்த மரதகக் கற்களின் ஒளி மூலமாக, மருக்கொழுந்து மாலையைச் சூட்டி, உபநிஷத்துக்களின் வாசனை எங்கும் வீசும்படிச் செய்கிறாய்.