Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 672)
Paththati 19 - மரகத பத்ததி
ஹரி சரண ஸரோஜ ந்யாஸ யோக்யம் பவத்யா: ப்ரகுணம் அபிலஷந்த்யோ வர்ண லாபம் துளஸ்ய: ப்ரதி திநம் உபஹாரை: பாதுகே தாவகாநாம் மரதக சகலாநாம் ஆச்ரயந்தே மயூகாந்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் வைக்கத் தகுந்ததாக உள்ள, உயர்ந்த உன்னுடைய பச்சை நிறத்தை அடைவதற்குத் துளசி மிகவும் ஆசைப்பட்டவளாக உள்ளாள். இதனால், தனது தளங்கள் பலவற்றையும் உனக்கு அன்றாடம் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறாள். இதன் மூலம், உனது மரதகக் கற்களின் பச்சை ஒளியைத் தனது தலையில் அடைந்து, என்றும் பசுமையாக நிற்கிறாள்.