Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 671)
Paththati 19 - மரகத பத்ததி
தரபரிணத தூர்வா வல்லரீ நிர்விசேஷை: மரதக சகலாநாம் மாம்ஸளை: அம்சுஜாலை: பசுபதி வித்ருதா த்வம் தஸ்ய பாணௌ நிஷண்ணம் மதுரிபு பதரக்ஷே வஞ்சயஸி ஏண சாபம்
மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை சிவன் தனது தலையில் தரித்துக் கொள்கிறான். அப்போது உனது மரதகக் கற்களின் ஒளியானது சற்றே தடித்தும், முதிர்ந்தும் உள்ள அருகம்புல் கொடி போன்று தோன்றுகின்றன. அந்த ஒளியின் மூலமாக நீ, சிவனின் கையில் உள்ள மான் குட்டியை ஏமாற்றுகிறாயோ?