Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 670)
Paththati 19 - மரகத பத்ததி
ஸேவார்த்தம் ஆகதவதாம் த்ரிதசேச்வராணாம் சூடாமணி ப்ரகரசாலிஷு மௌளிஷு த்வம் ஸம்வர்த்தயஸி அசுரமர்த்தந பாதரக்ஷே ஸ்வேந ஆச்ம கர்ப்ப மஹாஸா சுக பங்க்தி சோபாம்
அசுரர்களை அழிக்கும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை வணங்குவதற்காகத் தேவர்கள் பலரும் நிற்கின்றனர். அவர்களின் தலைகளில் உள்ள கிரீடங்களில், சிவந்த இரத்தினக்கற்கள் பல உள்ளன. உனது பச்சைக்கற்களின் ஒளியானது, அவர்களின் தலைகள் என்னும் நிலங்களில் உள்ள சிவந்த நெல் மணிகளைக் கொத்தித் தின்ன வந்த கிளிகளின் கூட்டம் போன்று அழகாக உள்ளது.