Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 669)

Paththati 19 - மரகத பத்ததி

உத்திச்ய காமபி கதிம் மணிபாதரக்ஷே ரங்கேச்வரஸ்ய சரணே விநிவேசிதாத்மா பாயோ ஹரிந் மணிருசா த்ருடபக்தி பந்தா ப்ராதுஷ்கரோதி பவதீ துளஸீ வநாநி

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னை ஸ்ரீரங்கநாதன் சாற்றிக் கொண்டு ஸஞ்சாரம் செய்கின்ற இடம் எங்கும் பச்சையாகத் தோற்றம் அளிக்கிறது. இதனைக் காணும்போது எப்படி உள்ளது என்றால் – மிகவும் உயர்ந்த கதியான மோக்ஷத்தை எண்ணி ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் ஒரு ஜீவன் சரணாகதி செய்கிறான்; அதன் பின்னர் அவன் கைங்கர்யமாகத் துளஸித் தோட்டங்களை அமைக்கிறான். இதனைப் போன்ற துளசித் தோட்டங்களை நீ அமைப்பது போன்று உள்ளது.