Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 668)

Paththati 19 - மரகத பத்ததி

ச்யாமாயமாந நிகமாந்த வந உபகண்ட்டா: ஸ்தாநே பதாவநி ஹரிந் மணய: த்வதீயா: பர்யந்த சாத்வலவதீம் ப்ரதயந்தி நித்யம் நாராயணஸ்ய ருசிராம் நக ரச்மி கங்காம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உபநிஷத்துக்கள் என்னும் சோலைகள் கறுத்து நின்று ஸ்ரீரங்கநாதனைச் சூழ்ந்தபடி உள்ளன. அவற்றை, உனது பச்சைக்கற்கள் மேலும் பச்சையாக மாற்றுகின்றன. ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்களைக் காணும்போது, அவற்றின் வெண்மையான ஒளியானது கங்கை போன்று உள்ளன. உனது மரதகக் கற்களின் ஒளி மூலம், அந்தக் கங்கையின் ஓரங்களில் பச்சைப்புல் தரை உள்ளது போன்று நீ அமைக்கிறாய்.