Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 667)
Paththati 19 - மரகத பத்ததி
அச்சேத்ய ரச்மி நியதை: கடிதா ஹரித்பி: ஸத்வர்த்மநா கதிமதீ மணிபாதரக்ஷே ஸந்த்ருச்யஸே ஸவித்ரு மண்டல மத்ய பாஜ: ரங்கேச்வரஸ்ய ரத ஸம்பதிவ அபரா த்வம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உனது பச்சைக்கற்களானவை குதிரைகள் போன்றும், அவற்றின் ஒளியானது எப்போதும் அறுந்து போகாத கடிவாளக் கயிறுகள் போன்றும் உள்ளன. இப்படியாக, நல்ல வழியாகச் ஸஞ்சாரம் செய்கின்ற நீ, சூர்ய மண்டலத்தின் நடுவில் காணப்படும் ஸ்ரீரங்கநாதனுக்கு, அங்குள்ள சூரியனின் தேரைக் காட்டிலும் உயர்ந்த தேர்ச் செல்வமாக உள்ளாய்.