Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 666)
Paththati 19 - மரகத பத்ததி
பத்த்நாஸி ரங்கேச்வர பாதரக்ஷே ஹரிந் மணீநாம் ப்ரபயா ஸ்புரந்த்யா சூடாபதேஷு ச்ருதி ஸுந்தரீணாம் மாங்கள்ய தூர்வாங்குர மால்ய பங்க்திம்
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! வேதங்களாகிய பெண்கள், ஸ்ரீரங்கநாதன் முன்பே விண்ணப்பம் செய்தபடி நிற்கின்றனர். உன்னுடைய மரதகக்கற்களின் ஒளி மூலமாக, மங்களகரமான இளம் அருகம்புல் கொண்டு தொடுக்கப்பட்டது போன்ற தோற்றம் அளிக்கும் ஒளி மாலையை, அந்தப் பெண்களின் தலையில் நீ சூட்டுகிறாய்.