Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 665)

Paththati 19 - மரகத பத்ததி

ப்ரஸாதயந்தீ மணிபாதுகே த்வம் விக்ஷேபயோகேந விஹாரவேளாம் ஹரிந் மநோஜ்ஞா ஹரிகாந்தி ஸிந்தோ: ஸந்த்ருச்யஸே சைவல மஞ்ஜரீவ

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் ஸஞ்சாரம் செய்கின்ற காலத்தில், அவனது திருவடிகளை உன் மீது வைக்கும் போது, உனது பச்சை நிறக் கற்கள் மூலமாக, அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்குபவளாக நீ உள்ளாய். அவன் அழகின் ஸமுத்திரமாகவே உள்ளான். அந்த ஸமுத்திரத்தில் காணப்படும் பாசிக்கொத்து போன்று நீ உள்ளாய்.