Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 664)

Paththati 19 - மரகத பத்ததி

ஹரித: ஸஹஸா ஹரிந் மணீநாம் ப்ரபயா ரங்க நரேந்த்ர பாதரக்ஷே துளஸீ தள ஸம்பதம் ததாதி த்வயி பக்தை: நிஹித: ப்ரஸூந ராசி:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன் மீது ஸ்ரீரங்கநாதனின் அடியார்கள் மலர்களைத் தூவியபடி உள்ளனர். இந்த மலர்களின் மீது உனது மரதகக்கற்களின் ஒளியானது விழுகிறது. உடனே அந்த மலர்கள் அனைத்தும் பச்சை நிறமாக மாறி, துளஸியின் மேன்மையை அடைகின்றன. இதனைக் காணும்போது, அங்கு துளசி அர்ச்சனை போன்றே உள்ளது.