Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 663)

Paththati 19 - மரகத பத்ததி

ஸமயே மணிபாதுகே முராரே: முஹுரத்ந: புரமுக்த சேடிகாஸ்தே ஹரிதாந் ஹரி தச்மநாம் மயூகாந் துளஸீ பல்லவ சங்கயா க்ஷிபந்தி

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் அந்தப்புரத்தில் பணி புரியும் பெண்கள், அதிகாலை நேரத்தில் உன் மீது பதிக்கப்பட்டுள்ள மரதகக் கற்களை, முந்தைய நாள் உன் மீது இறைக்கப்பட்ட துளசிக் கொழுந்துகள் என்று எண்ணி, அவற்றைத் தள்ளியபடி இருக்கின்றனர்.