Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 662)
Paththati 19 - மரகத பத்ததி
ஸவிலாஸ கதேஷு ரங்கபர்த்து: த்வத் அதீநேஷு பஹிஷ்க்ருதோ கருத்மாந் அதி கச்சதி நிர்வ்ருதிம் கதம்சித் நிஜ ரத்நை: த்வயி பாதுகே நிவிஷ்டை:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னால் ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரம் நடைபெறுகிறது. இதனால் கருடன் அந்த நேரங்களில் விலக்கப்பட்டவன் ஆகிறான். ஆனால் உன்னில் பதிக்கப்பட்ட தனது மரதக இரத்தினங்கள் கண்டு சற்றே நிம்மதி அடைகிறான்.