Sri Paduka Sahasram - Paththati 19 - மரகத பத்ததி (ச்லோகம் 661)

Paththati 19 - மரகத பத்ததி

வந்தே காருத்மதீம் வ்ருத்யா மணி ஸ்தோமைச்ச பாதுகாம் யயா நித்யம் துளஸ்யேவ ஹரி தத்வம் ப்ரகாச்யதே

ஸ்ரீரங்கநாதனை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எழுந்தருளச் செய்தல் என்னும் தொழில் ரீதியாகவும், இரத்தினங்களின் ஒற்றுமை காரணமாகவும், கருடனின் தொடர்பு கொண்ட பாதுகையை நான் வணங்குகிறேன். துளசியானது எப்படி தன்னால் அர்ச்சிக்கப்படும் ஸ்ரீரங்கநாதனின் நிறமானது, தன் போன்று பச்சை நிறம் என்று உணர்த்துகிறதோ, அது போன்றே பாதுகையின் மரதகங்களும் பச்சையை உணர்த்துகின்றன.