Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 660)

Paththati 18 - முக்தா பத்ததி

ரங்கேச சரணரக்ஷா ஸா மே விததாது சாச்வதீம் சுத்திம் யத் மௌக்திக ப்ரபாபி: ச்வேத த்வீபம் இவ ஸஹ்யஜா த்வீபம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! நீ எனக்கு அழிவற்ற வெண்மையை (பாவங்கள் அற்ற தன்மை, ஞானம்) உண்டாக்க வேண்டும். உன்னுடைய முத்துக்களின் அந்த ஒளியால் அல்லவோ ஸ்ரீரங்கம் என்னும் காவேரியால் சூழப்பட்ட தீவானது, ச்வேத த்வீபம் போன்று வெண்மையாக உள்ளது?