Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 659)
Paththati 18 - முக்தா பத்ததி
தேவ: ஸ்ரீபத லாக்ஷயா திலகித: திஷ்ட்டதி உபர்யேவ தே கௌரீ பாதஸரோஜ யாவக தநீ மூலே ஸமாலக்ஷ்யதே இத்தம் ஜல்பதி துர்மதாந் முரபித: சுத்தாந்த சேடீஜநே ப்ராய: த்வம் மணிபாதுகே ப்ரஹஸிதா முக்தா மயூக ச்சலாத்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடிகளில் உள்ள செம்பஞ்சுக் குழம்பு மூலம் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதன், உன் மீது எப்போதும் காணப்படுகிறான். பார்வதியின் தாமரை மலர் போன்ற திருவடிகளின் செம்பஞ்சுக் குழம்பைத் தனது செல்வமாகக் கொண்ட சிவன், உனது கீழே எப்போதும் உள்ளான் (அதாவது தனது தலையில் எப்போதும் தாங்கியபடி உள்ளான்). இப்படியாக ஸ்ரீரங்கநாச்சியாரின் பணிப்பெண்கள், கர்வம் காரணமாகக் கூறும் சொற்களைக் கேட்டு நீ சிரிக்கிறாய் போலும்.