Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 658)

Paththati 18 - முக்தா பத்ததி

முகுந்த பதரக்ஷிணி ப்ரகுண தீப்தய: தாவகா க்ஷரந்தி அம்ருத் நிர்ஜ்ஜரம் கமபி மௌக்திக க்ரந்தய: மநாகபி மநீஷிணோ யத் அநுஷங்கிண: தத்க்ஷணாத் ஜராமரண தந்துரம் ஜஹதி ஹந்த தாப த்ரயம்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! மிகுந்த ஒளி கொண்ட உனது முத்துக்களின் வரிசைகள் அமிர்த வெள்ளத்தை உண்டாக்குகின்றன. அதில் யாரேனும் ஒரு நொடி நீராடினாலே போதுமானது - அவர்கள் கிழத்தன்மை, மரணம் ஆகியவற்றையும், மூன்று விதமான துன்பங்களையும் அதே நொடியில் கைவிட்டு விடுகின்றனரே! என்ன வியப்பான செயல் இது?