Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 657)

Paththati 18 - முக்தா பத்ததி

கபர்த்தே கஸ்யாபி க்ஷிதிதர பத த்ராயிணி ததா முஹு: கங்காம் அந்யாம் க்ஷரதி தவமுக்தா மணிமஹ: முதாரம்ப : கும்ப ஸ்தலம் அநுகலம் ஸிஞ்சதி யதா நிராலம்போ லம்போதர களப சுண்டால சுளக:

பூமியைத் தூக்குகின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பற்றும் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளியானது, சிவன் உன்னைத் தனது தலையில் வைத்துக் கொள்ளும்போது, அங்கு மற்றொரு கங்கையைப் போலியாக உருவாக்கியது போன்று உள்ளது. இந்த ஒளியால் ஆகிய கங்கையை, உண்மையான கங்கை என்று எண்ணி, பிள்ளையார் தனது துதிக்கையை நீட்டி எடுக்க முயற்சி செய்கிறார். அங்கு எடுப்பதற்கு ஏதும் இல்லாமல் வீணான முயற்சியுடன் தனது தலையை அடிக்கடி நனைத்துக் கொள்கிறார்.