Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 656)
Paththati 18 - முக்தா பத்ததி
தவ ஹரிபாதுகே ப்ருதுள மௌக்திக ரத்ந புவ: ப்ரசலத் அமர்த்ய ஸிந்து லஹரீ ஸஹ தர்மசரா: பதம் ஜராமரம் விதத்தே கதம் அம்ப ஸதாம் ப்ரணத ஸுரேந்த்ர மௌளி பலிதங்கரணா: கிரணா:
ஸ்ரீஹரியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தாயே! உன்னுடைய முத்துக்களின் ஒளியானது, அலைகள் வீசும் கங்கையின் அலைகள் போன்று காணப்படுகிறது. இந்த வெண்மையான ஒளியானது, தேவர்களின் தலைகளில் விழுந்து, அவர்களின் தலைகள் நரைத்தது போன்றே உள்ளன. இப்படி இருந்தும் அவர்கள், வயோதிகம் மற்றும் மரணம் அடையாமல் எப்படி உன்னால் செய்யப்படுகின்றனர்?