Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 655)
Paththati 18 - முக்தா பத்ததி
ப்ராப்தா சௌரே: சரண கமலம் பாதுகே பக்தி பாஜாம் ப்ரத்யா தேஷ்டும் கிம் அபி வ்ருஜிநம் ப்ராபிதா மௌளிபாகம் தேவேந த்வம் தசச தத்ருசா தந்திராஜ்யஸ்ய தத்ஸே மூர்த்நி ந்யஸ்தா முகபடருசிம் மௌக்திகாநாம் ப்ரபாபி:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில் வந்து வணங்கும் அடியார்களின் ஸம்ஸார ரூபமான பாவங்களை நீக்கும் விதமாக உன்னை அவர்கள் தலைகளில் வைக்கின்றனர். இப்படிப்பட்ட உன்னை ஆயிரம் கண்கள் கொண்ட இந்தரன் தனது யானையான ஐராவதத்தின் தலையில் வைக்கிறான். அப்போது உனது முத்துக்களின் ஒளி மூலமாக யானையின் முகத்தில் தொங்கவிடப்படும் பட்டு வஸ்திரம் போன்று நீ விளங்குகிறாய்.