Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 654)

Paththati 18 - முக்தா பத்ததி

சுத்தே நித்யம் ஸ்திரபரிணதாம் தேவி விஷ்ணோ: பதே த்வாம் ஆஸ்தாநீம் தாம் அமித விபவாம் பாதுகே தர்க்கயாமி ஆலோகை: ஸ்வை: புவநம் அகிலம் தீபவத் வ்யாப்யகாமம் முக்தா: சுத்திம் யத் உபஸநாத் பிப்ரதி த்ராஸ ஹீநா:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எப்போதும் தூய்மையாகவும் ஸ்திரமாகவும் உள்ளன. அந்தத் திருவடிகளில் நீ எப்போதும் நிலையாக, எல்லையற்ற பெருமையுடன் விளங்குகிறாய். இப்படியாக உள்ள உன்னை, வேதங்கள் ஆனந்தமயம் என்ற கூறுகின்ற மணிமண்டபமாகவே எண்ணுகிறேன். இப்படிப்பட்ட உன்னை அடைந்ததால், குற்றம் ஏதும் இல்லாத முத்துக்கள், தங்கள் ஒளி மூலமாக அனைத்து உலகங்களும் ஒளிரும் விதமாக எரிகின்ற விளக்குகள் போன்று, தோஷங்கள் அற்ற தன்மையை அடைகின்றன.