Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 653)
Paththati 18 - முக்தா பத்ததி
திவ்யம் தாம் ஸ்திரம் அபியதாம் தேவி முக்தா மணீநாம் மத்யே கச்சித் பவதி மதுஜித் பாதுகே தாவகாநாம் ந்யஸ்தோ நித்யம் நிஜகுண கண வியக்திஹேதோ: பவத்யாம் ஆத்மஜ்யோதி: சமித தமஸாம் யோகிநாம் அந்தராத்மா
மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! தங்களுக்கு இயற்கையாகவே உள்ள வெண்மை முதலான குணங்களானவை, அறியாமை என்பது நீங்கி வெளிப்படும் பொருட்டு, உன்னிடத்தில் தங்களை ஒரு சிலர் சமர்ப்பணம் செய்கின்றனர். இவர்கள் ஜீவனின் ஸ்வரூபம், தங்களின் அந்தர்யாமியான பரமாத்மாவின் ஸ்வரூபம் ஆகியவற்றை அறிந்து கொள்கின்றனர். இந்த ஞானத்தால் அவர்களின் தமோ குணம் என்ற இருள் நீங்குகிறது. இதனால் மிகவும் உயர்ந்ததும், நித்யமான ஒளி கொண்டதும் ஆகிய உனது முத்துக்களின் நடுவே, அவர்களின் ஆத்மாவுக்கு ஒன்றாக நிற்கும்படியான நிலையை அடைகின்றனர்.