Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 652)
Paththati 18 - முக்தா பத்ததி
ப்ரகடித யசஸாம் தே பாதுகே ரங்கபர்த்து: த்விகுணித நக சந்த்ர ஜ்யோதிஷாம் மௌக்திகாநாம் கரணவிலய வேளா காதரஸ்ய அஸ்ய ஜந்தோ: சமயதி பரிதாபம் சாச்வதீ சந்த்ரிகேயம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களானவை உனது புகழ் காரணமாக, மேலும் புகழ் பெற்று விளங்குகின்றன. இவை ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரையில் உள்ள நகங்கள் என்னும் சந்த்ரன்களின் ஒளியை மேலும் அதிகப்படுத்தியபடியே உள்ளன. இந்த நிலவானது (முத்துக்களின் ஒளி), எப்போதும் நிலையாக நின்று, மரண காலத்தில் என்ன நேருமோ என்று அச்சத்துடன் உள்ள அனைவரது பயத்தையும் வேதனைகளையும் நீக்கியபடி உள்ளது.