Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 651)

Paththati 18 - முக்தா பத்ததி

புவநம் இதம் அசேஷம் பிப்ரதோ ரங்கபர்த்து: பதகமலம் இதம் தே பாதுகே தாரயந்த்யா: சிரவிஹரண கேதாத் ஸம்ப்ருதாநாம் பஜந்தி ச்ரமஜல கணிகாநாம் ஸம்பதம் மௌக்திகாநி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! அனைத்து உலகங்களையும் ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகள் தாங்கி நிற்கின்றன. அப்படிப்பட்ட அவனது திருவடிகளையும் நீ தாங்கி நிற்கின்றாய். ஆக, மூன்று உலகங்களுடன் சேர்த்து ஸ்ரீரங்கநாதனையும் தாங்கி நிற்பதால் உனக்குக் களைப்பு காரணமாக வியர்வைத் துளிகள் தோன்றுகின்றன. இவையே உனது முத்துக்கள் போன்று அழகாகத் தோன்றுகின்றன போலும்.