Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 650)

Paththati 18 - முக்தா பத்ததி

ஸக்ருதபி விநதாநாம் த்ராஸம் உந்மூலயந்தீம் த்ரிபுவந மஹநீயாம் த்வாம் உபாச்ரித்ய நூநம் ந ஜஹதி நிஹகாந்திம் பாதுகே ரங்கபர்த்து: சரண நக மணீநாம் ஸந்நிதௌ மௌக்திகாநி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை யாரேனும் ஒருமுறை வணங்கி நின்றால், அவர்களின் பயத்தை நீக்குபவளாக உள்ளாய். மூன்று உலகங்களாலும் கொண்டாடத்தக்கவளாக நீ உள்ளாய். உன்னை அண்டி நின்ற காரணத்தினால் மட்டுமே உனது முத்துக்கள், ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளின் நகங்கள் என்னும் இரத்தினக்கற்கள் தங்கள் அருகில் உள்ளபோதிலும், தங்கள் (முத்துக்கள்) ஒளியை இழக்காமல் உள்ளன என்பது நிச்சயம்.