Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 649)

Paththati 18 - முக்தா பத்ததி

முகளித பரிதாபாம் ப்ராணிநாம் மௌக்திகை: ஸ்வை: அம்ருதம் இவ துஹாநாம் ஆத்ரியே பாதுகே த்வாம் விஷதரபண பங்க்தி: யத் ப்ரபாவேந மந்யே லளித நடந யோக்யம் ரங்கம் ஆஸீத் முராரே:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளி மூலமாக நீ அனைத்து உயிர்களின் துன்பங்களை நீக்கி, அவர்களுக்கு இன்பம் அளிக்கவல்ல அமிர்தமாக உள்ளாய். இப்படிப்பட்ட அமிர்தமாக உள்ள உன்னைக் கொண்டாடுகிறேன். இப்படிப்பட்ட உனது அமிர்த சக்தியால்தான் கண்ணனுக்கு விஷம் நிறைந்த காளியனின் படம் எடுத்த தலைகள், நடனம் ஆடத் தகுந்த அரங்கம் போன்று ஆனது போலும் (இதனையே சற்று மாற்றி - உனது அமிர்த வெள்ளம் காரணமாகவே ஸ்ரீரங்கநாதன் எந்த விதமான பாதிப்பும் இன்றி ஆதிசேஷன் மீது சயனித்துள்ளான் போலும் - என்று ரஸமாகவும் பொருள் உரைக்கலாம்).