Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 648)

Paththati 18 - முக்தா பத்ததி

மதுரிபு பத மித்ரை: வைரம் இந்தோ: ஸரோஜை: சமயிது இவ தாரா: ஸேவமாநா: சிரம் த்வாம் ப்ரசுரகிரணபூரா: பாதுகே ஸம்ச்ரிதாநாம் கலிகலுஷம் அசேஷம் க்ஷாளயந்தீவ முக்தா:

ஸ்ரீரங்கநதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியின் தோழர்களாக உள்ள தாமரை மலர்களுடன், சந்த்ரனுக்கு நீண்டகாலமாக இருந்து வரும் பகையை நீக்க எண்ணி, உன்னை வேண்டி நிற்கும் நக்ஷத்ரங்கள் போன்று உன் முத்துக்கள் உள்ளன. இந்த முத்துக்கள், அதிகமான ஒளியுடன், மிகுந்த வெள்ளத்துடன் பாயும் நிதி போன்று நின்று, உன்னை அடைந்தவர்களின் கலிகால பாவங்களைச் சிறிதும் மீதம் இல்லாமல் கழுவுகின்றன.