Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 647)
Paththati 18 - முக்தா பத்ததி
பலிவிமதன வேளா வ்யாபிந: தஸ்ய விஷ்ணோ: பதஸரஸிஜ மாத்வீ பாவநீ தேவி நூநம் ஜநநஸமய லக்நாம் ஜாஹ்நவீ தாவகாநாம் வஹதி சரணரக்ஷே வாஸநாம் மௌக்திகாநம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகாதேவியே! மஹாபலியை அடக்கிய காலத்தில் ஓங்கி வளர்ந்து நின்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில் தேன் போன்று, அனைத்துவிதமான பாவங்களையும் போக்கவல்ல கங்கை உண்டானது. அப்போது உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்கள் அதனுடன் ஒட்டிக்கொண்டன. அப்போது இந்த முத்துக்களின் வாசனையை அந்தக் கங்கை பெற்றது என்பது உறுதி.