Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 646)

Paththati 18 - முக்தா பத்ததி

அநுதிநம் லளிதாநாம் அங்குளீ பல்லவநாம் ஜநித முகுள சோபை: தேவி முக்தாபலை: த்வம் ப்ரகடயஸி ஜநாநாம் பாதுகே ரங்கபர்த்து: பதஸரஸிஜ ரேகா பாஞ்சஜந்ய ப்ரஸூதிம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகை தேவியே! அன்றாடம் புதுப்பொலிவுடனும் அழகுடனும் காணப்படும் ஸ்ரீரங்கநாதனின் திருவடி விரல்கள் என்னும் தளிர்களுக்கு மொட்டுக்கள் போன்று உனது முத்துக்கள் மேலும் அழகு சேர்க்கின்றன. தாமரை மலர் போன்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடியில் காணப்படும் ரேகை உருவில் உள்ள பாஞ்சஜந்யம் என்ற சங்கிலிருந்து இந்த முத்துக்கள் வெளிவந்தன என்று நீ அறிவிக்கிறாய் போலும்.