Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 645)
Paththati 18 - முக்தா பத்ததி
யே நாம கேபி பவதீம் விநய அவநம்ரை: உத்தம்ஸயந்தி க்ருதிந: க்ஷணம் உத்தமாங்கை: உச்சந்தி ரங்கந்ருபதே: மணிபாதரக்ஷே த்வத் மௌக்திமௌக நியதாம் இஹ தே விசுத்திம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பவளே! புண்ணியம் செய்தவர்கள் உனக்கு வணக்கம் செலுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் தலை வணங்கி, உன்னை ஒரு நொடி தங்கள் தலையில் ஏற்றாலே போதுமானது. அவர்கள் இந்த உலகத்தின் வாழும்போது, உனது முத்துக்களின் ஒளி போன்ற தோஷம் அற்ற வெண்மையான தன்மையை அடைகின்றனர்.