Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 644)

Paththati 18 - முக்தா பத்ததி

ஆசாஸ்ய நூநம் அநகாம் மணிபாதரக்ஷே சந்த்ரஸ்ய வாரிதிஸுதா ஸஹஜஸ்ய வ்ருத்திம் தாத்ரீம் முகுந்தபதயோ: அநபாயிநீம் த்வாம் ஜ்யோத்ஸ்நா ஸமாச்ரயதி மௌக்திக பங்க்தி லக்ஷ்யாத்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உனது முத்துக்களின் வரிசையானது வெண்மையான நிலவு போன்று உள்ளது. இந்த நிலவு செய்வது என்ன என்றால் – ஸ்ரீரங்கநாச்சியாரின் உடன் பிறந்தவனான சந்த்ரன் தேய்ந்து கொண்டே செல்லாதபடி, அவனுக்கு எப்போதும் பூர்ணத்வம் இருக்க வேண்டும் என்று எண்ணியது; இதனால் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளுக்குச் செவிலித்தாய் போன்று இருக்கும் உன்னை அடைகின்றது போலும்.