Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 643)
Paththati 18 - முக்தா பத்ததி
பத்மாபதே: விஹரத: ப்ரியம் ஆசரந்தீ முக்தா மயூக நிவஹை: புரதோ விகீர்ணை: கந்தாநி காஞ்சந பதாவநி பத்மநீநாம் மந்யே விநிக்ஷிபஸி மந்திர தீர்க்கிகாஸு
தங்கத்தால் செய்யப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகன் ஸஞ்சாரம் செய்யும் காலங்களில் அவன் முன்பாக உனது முத்துக்களின் ஒளி பாய்ந்து செல்கிறது. அவற்றின் மூலம் அவன் நடக்கும் இடம் எங்கும், தாமரைக் கொடிகளின் கிழங்குகளை நீ புதைத்து வைக்கிறாய் போலும். இதன் மூலம் அவனுக்கு நீ மகிழ்வையும் ப்ரியத்தையும் ஏற்படுத்துகிறாய்.