Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 642)
Paththati 18 - முக்தா பத்ததி
மந்யே முகுந்த சரணாவநி மௌளி தேசே விந்யஸ்ய தேவி பவதீம் விநதஸ்ய சம்போ: ஆபாத யந்தி க்ருதா: ப்ரதிபந்நதாரம் சூடா துஷாரகிரணம் தவ மௌத்திகௌகை:
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! உன்னை வணங்கி நிற்கும் சிவனுடைய தலையில் உன்னை அர்ச்சகர்கள் வைக்கின்றனர். சிவனுடைய தலையில் உள்ள சந்திரனுடன் சேர்ந்து, உன்னில் பதிக்கப்பட்ட முத்துக்களும் அவன் தலையில் அப்போது காணப்படுகின்றன. இதனால் அவன் தலையில் சந்த்ரனுடன் விண்மீன்களும் சேரும்படிச் செய்கின்றனர் என்று எண்ணுகிறேன்.