Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 641)

Paththati 18 - முக்தா பத்ததி

பாவோத்தரை ரதிகதா பரத ப்ரதாநை: ப்ரத்யுப்த மௌக்திக மிஷேண விகீர்ணபுஷ்பா ரங்கேச்வரஸ்ய நியதம் த்வயி லாஸ்யபாஜ: ரங்கஸ்தலீவ லளிதா மணிபாதுகே த்வம்

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மிகுந்த பக்தி கொண்ட பரதன் முதலானவர்களால் (இதனை - மிகுந்த அபிநய திறன் கொண்ட நாட்டியக்காரர்கள் என்று கூறினார்) அடையப்பட்டது; முத்துக்கள் என்னும் மலர்களால் வாரி இறைக்கப்பட்டது - இப்படிப்பட்ட நாடக மேடை போன்று உள்ள உன் மீது நடனம் செய்வதற்குத் தயாராக உள்ள ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்ற அழகான மேடையாக நீ உள்ளாய்.