Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 640)
Paththati 18 - முக்தா பத்ததி
ரங்கேச பாத நக சந்த்ர ஸுதா அநுலேபம் ஸம்ப்ராப்ய ஸித்தகுளிகா இவ தாவகீநா: ஸம்ஸார ஸம்ஜ்வரஜுஷாம் மணிபாதரஷே ஸம்ஜீவநாய ஜகதாம் ப்ரபவந்தி முக்தா:
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய முத்துக்கள் அனைத்தும் ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்களில் இருந்து வெளிவரும் ஒளி என்னும் அமிர்தப் பூச்சை அடைகின்றன. இதனால் அவற்றின் ஒளியானது, சித்தர்கள் செய்கின்ற மாத்திரைகள் போன்று மாறுகின்றன. இந்த முத்துக்களின் ஒளியானது, கடுமையான ஸம்ஸார நோயை நீக்கி, அனைத்து உலகங்களையும் பிழைக்கவல்ல சக்தி பெறுகின்றன.