Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 639)
Paththati 18 - முக்தா பத்ததி
உத்காட பங்சமநை: மணிபாதரக்ஷே முக்தா அம்சுபி: முரபித: நக ரச்மிபிந்நை: சூடாபதேஷு நிஹிதா த்ரிதச ஈச்வரணாம் தீர்த்த உதகை: ஸ்நபயஸீவ பதார்த்திந: தாந்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தேவர்களின் தலைகளில் வைக்கப்பட்ட நீ உனது முத்துக்களின் ஒளியால் செய்வது என்ன - அதிகமாகக் கெட்டியாகி, சேறு போன்றுள்ள பாவங்களை, ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்களின் ஒளியுடன் சேர்ந்தபடி நின்று, உனது முத்துக்களின் ஒளி மூலம் விலக்குகிறாய். இப்படியாக அந்த முத்துக்களின் ஒளி என்னும் புண்ணிய நீர் கொண்டு, உயர்ந்த பதவிகளை வேண்டி நிற்கும் தேவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கிறாய் போலும்.