Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 638)

Paththati 18 - முக்தா பத்ததி

ச்யாமா தநுர் பகவத: ப்ரதிபந்ந தாரா த்வம் சந்த்ரிகா விமல மௌக்திக தர்சநீயா ஸ்தாநே தத் ஏதத் உபயம் மணிபாதரக்ஷே போதம் க்ஷணாந் நயதி புத்தி குமுத்வதீம் ந:

இரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகையே! உனது முத்துக்களின் ஒளியுடன் காணும்போது, ஸ்ரீரங்கநாதனின் திருமேனியானது, இரவு போன்று உள்ளது. உன்னுடைய வெண்மையான முத்துக்களின் ஒளியால் நீ அந்த இரவில் உதிக்கும் சந்த்ரன் போன்று உள்ளாய். இப்படியாக இரவுப்பொழுதும், சந்த்ரனுமாக என்று உள்ள நீங்கள் இருவரும், எங்கள் புத்தி என்னும் ஆம்பல் ஓடையை மலரச் செய்யவேண்டும் (ஆம்பல் மலரானது இரவில் மலரும். இதனைப் போன்று நம் மனம் மலரவேண்டும் என்றார்).