Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 637)

Paththati 18 - முக்தா பத்ததி

நிஸ்ஸீம பங்கமலிநம் ஹ்ருதயம் மதீயம் நாதஸ்ய ரங்கவஸதே: அதிரோடும் இச்சோ: மாத: தவ ஏவ ஸஹஸா மணிபாதரக்ஷே முக்தாம்சவ: ஸ்படிகஸௌத துலாம் நயந்தி

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தாயே! என்னுடைய மனதில் எல்லையற்ற காலமாக அழுக்கு படிந்தபடி உள்ளது. இப்படிப்பட்ட சேற்றில் இறங்க ஸ்ரீரங்கநாதன் எண்ணுகிறான். இதனைக் கண்டவுடன் உனது முத்துக்களின் ஒளி எனது மனதில் புகுந்து, அங்கு ஸ்படிகத்தால் செய்த உப்பரிகையுடன் கூடிய மாளிகையை ஏற்படுத்தி விடுகின்றது.