Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 636)
Paththati 18 - முக்தா பத்ததி
ஆம்ரேடிதை: பத நக இந்து ருசா மநோஜ்ஞை: முக்தாம்சுபி: முரபிதோ மணிபாதுகே த்வம் ஸாபாவிகீம் ஸகலஜந்துஷு ஸார்வபௌமீம் ப்ராய: ப்ரஸத்திம் அமலாம் ப்ரகடீகரோஷி
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளியானது, ஸ்ரீரங்கநாதனின் திருவடி நகங்களுடைய ஒளியால், மேலும் அழகாகவும் ஒளியுள்ளதாகவும் ஆக்கப்படுகின்றன. இதனைக் காணும்போது அனைத்து உயிர்களிடத்திலும் இயல்பாகவே ஸ்ரீரங்கநாதன் கொண்டுள்ள, எந்தவிதமான களங்கமும் இல்லாத உயர்ந்த அநுக்ரஹத்தை வெளிப்படுத்துவது போன்று உள்ளது.